”பெண் காவலருக்கு ராயல் சல்யூட்”- கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் காவலர்:வைரலாகும் வீடியோ!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி பெண் காவலர் ஒருவர் சாலையிலிருந்து அகற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கன…

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி பெண் காவலர் ஒருவர் சாலையிலிருந்து அகற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த
நிலையில் நேற்று குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி பகுதிகளில் கனமழை வெளுத்து
வாங்கியது. குன்றத்தூர் பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமாக கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பான பேனர்களை வைத்துள்ளனர்.

இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அறுந்து பறந்து வந்து சாலையில் விழுந்தது. அப்போது பணியில் இருந்த பெண் போலீசார் ஒருவர் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு நலன் கருதி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி சாலையில் விழுந்து கிடந்த பேனரை
அப்புறப்படுத்தினார்.

பெண் காவலரின் இந்த செயலானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் பலர் பெண் காவலருக்கு ராயல் சல்யூட் என கமெண்ட் செய்தபடி வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர்.  பொதுமக்களிடம் இருந்து  பெண்காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.