”சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், ஆய்வு பணியை தொடங்கியுள்ளது!” – இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், ஆய்வு பணியை தொடங்கி உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட…

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், ஆய்வு பணியை தொடங்கி உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளது என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

லேண்டரில் ILSA, RAMBHA, chaSTE ஆகிய கருவிகளின் செயல்பாடுகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, வளிமண்டலம் உள்ளிட்டவை குறித்து, ரோவர் ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்து விசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. நிலவில் உள்ள பாறைகள் மற்றும் மண்துகள்களில் அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம் உள்ளிட்ட தனிமங்களை பற்றி ஆய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோவரில் உள்ள 2 கேமராக்கள், லேண்டர் எவ்வளவு தொலைவில், எந்த திசையில் உள்ளது என்ற விவரங்களை அறிய உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.