சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன்! சிறந்த நடிகை அலியா பட் & கிர்த்தி சனோன்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்ஸ் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான…

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்ஸ் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது கங்குபாய் கதியவாடி திரைப்படத்தில் நடித்த அலியா பட்டிற்கும், மிமி படத்தில் நடித்த கிர்த்தி சனோனுக்கும் வழங்கப்படுகிறது.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருங்கிணைப்பு விருதான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த இயக்குநருக்கான விருது கோதாவரி – தி ஹோலி வாட்டர் திரைப்படத்தின் இயக்குநர் நிகில் மகாஜனுக்கு வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.