ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 77 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தொடக்க ஓவர்களிலேயே தங்களது விக்கெட்டை இழந்தனர். அதன்பிறகு இறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தும் மார்னஸ் லபுஷேனும் நிதானமாக விளையாட தொடங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், அவர்கள் நிதானமான ஆட்டத்தையும் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்கள் கலைத்தனர். ஜடேஜாவின் சுழலில் ஸ்மித் போல்டாகி வெளியேறினார். மார்னஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா வீசிய பந்தை எதிர்கொண்ட போது ஸ்டெம்பிட் முறையில் அவுட் ஆனார். அடுத்தெடுத்த வந்த வீரர்களும் ஜடேஜா தனது சுழலில் வீழ்த்தினார். முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இந்தியா அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 20 ரன்களுடன் முர்பி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால், தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார். இதில் 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.
முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை குவித்துள்ளது.