முக்கியச் செய்திகள் விளையாட்டு

புதிய சாதனை படைப்பாரா ரோகித் சர்மா?

இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசினால் டி 20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைய படைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசினால் இந்திய வீரர்களில் 400 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். தற்போது டி20 போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா எட்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்திலும், இவருக்கு அடுத்தபடியாக பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், பிரெண்டன் மெக்கல்லம், ஷேன் வாட்சன், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் உள்ளனர்.

இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 397 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், 324 சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 315 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், தோனி 303 ரன்களை அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது

Halley karthi

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

Ezhilarasan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஷாக் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்

Gayathri Venkatesan