முக்கியச் செய்திகள் இந்தியா

“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்தி ட்வீட்

செப்டம்பர் 17க்கு பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை குறைந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுமார் 2.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதை நாட்டில் ஒரே நாளில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் புதிய சாதனையாக அமைந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்ச்சி முடிந்து விட்டது” என நாட்டில் கொரோனா தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில் தடுப்பூசி போடும் எண்ணிகை குறைந்து வருவது தொடர்பான வரைபடம் ஒன்றையும் இணைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ரோல்ஸ் ராய் கார் விவகாரம்: நடிகர் விஜய் மேல்முறையீடு

Ezhilarasan

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

Jeba Arul Robinson

நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?