ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி…

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் தொம்மையார் காலனியை சேர்ந்த ஆறுமுகம், அவரது தம்பி சொர்ண ராஜ் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சிவபெருமாளை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆறுமுகம் சிவபெருமாளை சாலையில் கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.