5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இங்கிலாந்தில் இருந்து மும்பை
இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட மூன்று வீரர்கள் தனி விமானத்தில் அபுதாபி திரும்பியுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோ னா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி வீரர்கள் தயக்கம் காட்டியதை அடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தினர். பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவித் தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்தியா மட்டும் இங்கிலாந்து வீரர்கள் ஐக்கிய
அரபு அமீரகம் திரும்ப முடிவு செய்தனர். அதன்படி மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்கள்
குடும்பத்துடன் தனி விமானத்தில் அபுதாபி திரும்பினர்.
இதை மும்பை இண்டியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள் ளது. அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’என்று கூறியுள்ளது.
இதே போல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி, வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் தனி விமானத்தில் துபாய் செல்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக, பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரி ன் எஞ்சிய 31 போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19- ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடக்கிறது.