முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் அறிவிப்பால் பாரதி அன்பர்கள் மகிழ்ச்சி: இல.கணேசன்

பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் பாரதியின் அன்பர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக மணிப்பூர் ஆளுநர் இல.கணே சன் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரதியாரின் நினைவு நாளான இன்று, மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவில்லத்தில் புகைப்படக் கண்காட்சியை மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதியின் கருத்துகள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தின் புதிய ஆளுநர் குறித்த கேள்வி கேட்ட போது, நான் இப்போது மணிப்பூர் ஆளுநர் எனத் தெரிவித்தார்.

 

 

Advertisement:
SHARE

Related posts

விராத் கோலிக்கு என்னாச்சு? 50 இன்னிங்ஸில் இப்படித்தான்

Gayathri Venkatesan

பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி!

Gayathri Venkatesan

கைத்தறி விழிப்புணர்வுக்கு நடிகர்களை வைத்து விளம்பரம்

Gayathri Venkatesan