கும்பகோணம் அருகே, செம்மங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தடுத்து நிறுத்தும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய
அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கும்பகோணம் அருகே, செம்மங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு
அரசின் மூலம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உண்டான இடத்தை பஞ்சாயத்து
மூலம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை வட்டாட்சியர் அவர்களால் ஆய்வு
செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சியர் மூலம் உத்தரவு பெற்று, கிராம பொதுமக்களிடம் முறையான
ஒப்புதல் வழங்கியும், இந்த நிலத்தை பஞ்சாயத்து மூலம் நுகர்வு பொருள் வாணிப
கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தை அதிமுகவை சேர்ந்த
ஒப்பந்தக்காரர் ஒப்பந்தம் எடுத்த நிலையில், இது திமுக ஒப்பந்தக்காரனுக்கு தான்
கொடுக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டதால் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், செம்மங்குடி ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகளும்,
பொதுமக்களும் குடவாசல் திருவாரூர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை அடுத்து நாச்சியார் கோவில் காவல்துறையினர்,
சாலை மறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கு. பாலமுருகன்