குண்டாறு அணையின் சேதத்தை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டாறு அணை சேதமடைந்துள்ளதால் அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கண்ணு புளி…

குண்டாறு அணை சேதமடைந்துள்ளதால் அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கண்ணு புளி மெட்டிலில் உள்ளது. 36 .10 அடி உயரமுள்ள குண்டாறு அணையின் மூலம் நேரடியாக 742 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

 

குண்டாறு அணையில் ஒரு கி.மீ. தூரத் தடுப்பணையும் அதன் முடிவில் நீரைத் திறந்துவிட மதகும் கட்டப்பட்டுள்ளது. அணையின் மறு பகுதிக்குச் சென்றால் மேலும் குளிர்ச்சியாக இருக்கும்..காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் இந்த அணைப் பகுதிக்குச் செல்லலாம். இந்தஅணைப் பகுதிக்கு அருகில் ஒரு அருவியும் உள்ளது. குற்றாலத்தில் நீர்ப் பெருகும் காலத்தில் இந்த அருவியிலும் நீர் கொட்டும்.

 

இந்நிலையில், குண்டாறு அணை தற்போது சேதமடைந்துள்ளதாகவும், பொதுப்பணித்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

குண்டாறு அணை தண்ணீர் இல்லாமல் தற்போது வறண்ட சூழ்நிலையில் காணப்படுவதால், அணையின் தடுப்புச் சுவர்கள் ஆங்காங்கே சில இடிந்து விழும் ஆபத்தில் காணப்படுகிறது.

 

இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணைக்கு தண்ணீர் வருவதற்கு முன்பே, பொதுப்பணித்துறையினர் விரைவாக இதனை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.