சென்னையில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை – தவிக்கும் மக்கள்

சென்னையில் கொசுவினால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 63வது வார்டு புதுப்பேட்டை தெற்கு குளம் சாலையில்…

சென்னையில் கொசுவினால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 63வது வார்டு புதுப்பேட்டை தெற்கு குளம் சாலையில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன .ஆனால், பொது கழிப்பிடம் ஒன்று மட்டுமே கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும் சுத்தம் செய்யப்படாததால் தண்ணீரின் மூலம் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி அவர்களின் வீடுகளுக்கு எதிரே உள்ள கூவம் மற்றும் அதனைச் சுற்றி அடர்ந்து கிடக்கும் செடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டாலும் கொசுக்களின் அளவு குறையவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றன.

இந்த கொசுக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வீடுகளில் இரவு நேரங்களில் கொசுவத்தி  சுருள்களை ஏற்றி வைப்பதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பலப் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இவற்றை பயன்படுத்தினால் தான் சிறிது நேரமாவது கொசுத்தொல்லை இல்லாமல் தூங்க முடிகிறது என்றும்,மேலும் இந்த கொசுக்கள் உணவுகளில் மொய்த்த வண்ணம் உள்ளதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும், வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

K.RUBY

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.