சமையல் எரிவாயு விலை உயர்வு; அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1053க்கும், சென்னையில் ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44% உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை. இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?

உஜ்வாலா வகை இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு மானியத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்படுவது மக்களுக்கு நன்மை பயக்காது. விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.