இந்திய அணியின் ஜெர்சியில் ரிஷப் பந்த்!

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியில் விளையாடவுள்ள நிலையில்,  அவர் இந்திய அணியின் ஜெர்சியில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.   ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில்…

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியில் விளையாடவுள்ள நிலையில்,  அவர் இந்திய அணியின் ஜெர்சியில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.  

ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கிறது.  இதில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது.  குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.  இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.  இதற்காக சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.  இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதுவரை இந்திய அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து வந்த நிலையில், புதிய ஜெர்சியின் 2 கைகளிலும் காவி நிறம் இடம்பெற்றிருக்கிறது.   இதனிடையே புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.   இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்.  இதனையடுத்து அவர் டி20 உலகக்கோப்பையில் மீண்டும் இந்திய அணியில் விளையாடவுள்ள நிலையில், அவர் இந்திய அணியின் ஜெர்சியில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.  

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ரோகித் ஷர்மாவிராட் கோலியஷஸ்வி ஜெய்ஸ்வால்சூர்யகுமார் யாதவ்ரவீந்திர ஜடேஜாஜஸ்ப்ரீத் பும்ராரிஷப் பந்த்சஞ்சு சாம்சன்ஹர்திக் பாண்டியாஷிவம் துபேஅக்சர் படேல்குல்தீப் யாதவ்யுஸ்வேந்திர சஹால்அர்ஷ்தீப் சிங்சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.