நாமக்கல்லில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து கோடிக்கணக்கான முட்டைகல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிற்து. மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நாமக்கல் முட்டை கொள்முதல் விலையை முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தினந்தோரும் கூடி முடிவு செய்து வருகின்றனர்.
அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.70 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.75 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதன் விலைவாக சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ. 7.45 விற்பனை செய்யப்படுகிறது.
கோழித்தீவனத்தின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களினால் முட்டை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.




