RIP | ‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!

திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக் குறைவால் காலமானார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. விதார்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான…

திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக் குறைவால் காலமானார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. விதார்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள் : #Spain | முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 10 பேர் பலி!

கடந்த ஒரு மாதமாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (நவ.15) இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் திடீர் மறைவு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.