முக்கியச் செய்திகள் இந்தியா

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த 16ம் தேதி, திரிபுரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : ஈரோடு இடைத்தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

இதைத்தொடர்ந்து 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில்  சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை  அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. இதில் 20 தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. பாதுக்காப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச்) 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்

G SaravanaKumar

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

EZHILARASAN D

தீவிரமடையும் போர்; உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

G SaravanaKumar