முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சமூக நீதி துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று சமூக நீதி துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் சமூக நீதி துறையின் செயல்பாடுகள், நடப்பு நலத்திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள், மாணவர் விடுதிகள் மேம்பாடு, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகவும் பேசப்பட உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் துறையின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் , சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.