புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அரசு போக்குவரத்து கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு…

அரசு போக்குவரத்து கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து, அவற்றுக்கு மஞ்சள் வாணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றன.

இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 52 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் செல்போன் சார்ஜ் பாயிண்ட் அத்தியாவசியமாகியுள்ள நிலையில், செல்போன் சார்ஜ் போடும் வசதியும் உள்ளது. வயதானவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் உள்ளன. மேலும் தானியங்கி கதவு, டிஜிட்டல் பெயர் பலகை உள்ளிட்ட அம்சங்களும இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், புதிய பேருந்துகள் சாலையில் ஓடும் போது புதிய மலர்ச்சியை ஏற்படுத்தும் என்றார். பேருந்துகள் மட்டும் மறுசீரமைக்கப்படவில்லை, 10 ஆண்டுகாலம் சீரழிந்த போக்குவரத்துத் துறையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முறையான தேதியில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம் மூலம் 326 கோடி கட்டணமில்லா பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.