BTS இசைக்குழுவின் பாடகர் “V“ தனது இரண்டாவது பாடலான ‘ரெயினி டேஸ்’ பாடலை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை கொண்ட இந்த இசைக்குழு, தனது வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமான BTS, ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள இந்த இசைக்குழு, கடந்த ஆண்டு ’ப்ரூஃப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டது.
அண்மையில் BTS இசைக்குழு, தங்களது 10 ஆண்டுகள் இசை பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகத்திற்கு `பிஹைண்ட் தி ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், BTS இன் V, தனது இரண்டாவது பாடலான ‘ரெயினி டேஸ்’ பாடலை தற்போது வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது வரவிருக்கும் னி ஆல்பமான ‘லேஓவர்’ இசை வீடியோவை அடுத்த மாதம் வெளியிடுகிறார். ‘ரெயினி டேஸ்’ இசை வீடியோ V இன் மயக்கும் குரலில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.







