டிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் புதிய படத்திற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படம் மக்களிடையே மிக நல்ல வரவேற்பை பெற்றது. நானியின் புதிய ரக்கட் தோற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் தசரா படம் நல்ல பெயரை பெற்றது. தசரா படத்திற்கு பிறகு நானி சௌரவ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ஹை நானா படத்தில் நடித்தார். மிருணாள் தாகூர் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நானி மற்றும் மிருனாள் தாகூர் ஜோடி மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஹை நானா படம் வசூலில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
இந்நிலையில் நானியின் 33 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைகிறார் நானி. எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிரது.
https://twitter.com/NameisNani/status/1774042172796657764
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.







