பத்திரப் பதிவுத்துறையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஆலோசித்த வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள கலையரங்கத்தில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வணிக வரி மற்றும் பதிவுத் துறையை சேர்ந்த அதிகாரிகள், வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பங்கேற்ற வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, ஆன்லைனில் தமிழ் மொழியிலேயே பத்திரப் பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் பத்திரப்பதிவு துறையை சீரமைக்கும் வகையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.







