Skip to content
August 08, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » resolution on financial sharing passed in the assembly with the support of dmk and aiadmk
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிதி பகிர்வு தீர்மானம் – திமுக, அதிமுக ஆதரவுடன் சட்டசபையில் நிறைவேற்றம்!

தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்

Author Avatar

Web Editor

August 7, 202612:17 pm AIADMKassemblybudget sessionDMKfinancial sharingMariyavilson

தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார். அப்போது, “மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.

தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுக

By Web Editor August 8, 2026

காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே இந்த எம்.பி.க்கள் கூட்டம்! – திமுக

By Web Editor August 8, 2026

கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? – அன்புமணி கேள்வி?

By Web Editor August 8, 2026

11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் கடிதம்!

By Web Editor August 8, 2026
#ट्रेंडिंग हैशटैग:AIADMKassemblybudget sessionDMKfinancial sharingMariyavilson

Post navigation

Previous Previous post: “காவிரி விவகாரத்தில் இந்த அரசு சமரசம் செய்து கொள்ளாது” – அமைச்சர் ஆனந்த்!
Next Next post: தேசிய கைத்தறி தின வாழ்த்துகள் – பிரேமலதா விஜயகாந்த்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading