ரிசர்வ் வங்கியின் நகைக் கடன் புதிய வரைவு விதி – தளர்த்த கோரி நிதியமைச்சகம் சார்பில் பரிந்துரை!

நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிகளை தளர்த்த கோரி நிதியமைச்சகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நகைக் கடன் வழங்குவது தொடர்பாக புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், 75 சதவீதம் மட்டுமே கடன், நகைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும், நகைக்கான தரம், தூய்மை குறித்த சான்று வழங்க வேண்டும் போன்ற பல கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வரை வழிகாட்டு நெறிமுறைகள் வெகுஜன மக்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் அரசியல் தலைவர்கள் ரிசர்வ் வங்கியின் புதிய வரை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நிதியமைச்சகம் சார்பில், ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான நகைக் கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து தளர்வு மற்றும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த 01- 01-2026 வரை கால அவகாசம் வேண்டும் என்ற பரிந்துரைகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்பட்டது. இதையேற்ற ரிசர்வ் வங்கி தற்போது ரூ.2லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகள் பொருந்தாது என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.