முக்கியச் செய்திகள் தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ்; இராமதாஸ் கோரிக்கை

தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“பகுதி நேர ஆசிரியர்களின் தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை, போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே, அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன்பணம் வழங்க வேண்டும்.” என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

முல்லைப் பெரியாறு அணை 4-வது முறையாக 142 அடியை எட்டியது

Halley Karthik

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்

Halley Karthik

முழு ஊரடங்கின் பலன்: குறைகிறது கொரோனா, புதிதாக 21,410 பேருக்கு தொற்று உறுதி!

Halley Karthik