முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

ஓடும் ரயிலில் ஜோக்கர் போல உடையணிந்து சரமாரி கத்திக்குத்து: 17 பேர் படுகாயம்!

ஓடும் ரயிலில், ஜோக்கர் போல உடையணிந்து வந்த ஒருவர், பயணிகளை சரமாரி யாகக் கத்தியால் தாக்கியதில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷின்ஜுகு (Shinjuku) நகருக்கு மெட்ரோ ரயில் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், கரோக்கி மற்றும் கிளப்புகளுக்கு பிரபலமான ஷின்ஜுகு நகருக்கு ஏராளமானோர் அதில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஜோக்கர் போல உடையணிந்து வந்த ஒருவரும் பயணம் செய்தார். நேற்று ஹாலோவீன் தினம் என்பதால், அதற்காக அவர் அப்படி வந்திருக்கிறார் என சக பயணிகள் நினைத்தனர்.

இந்நிலையில் திடீரென அவர், தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர் களை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தார். இதில் 17 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ரயிலில் இருந்து அலறினர். ரயிலுக்கு உள்ளேயே அங்கும் இங்கும் பயணிகள் ஓடினர். ரயில் நின்றதும் அவர் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் நடந்து சென்றார். விரைந்து வந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

காயம் அடைந்த வர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாயின.

போலீசார், கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தினர். ’தனக்கு மரணத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டேன் என்று கூறியிருக்கிறார், அந்த ஜோக்கர்!

Advertisement:
SHARE

Related posts

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Halley karthi

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி!

Vandhana

டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது வராத கொரோனா, கோயிலை திறந்தால் வருமா? : அண்ணாமலை

Saravana Kumar