வெளியானது PROJECT – K திரைப்படத்தின் உண்மையான தலைப்பு – படத்திலிருக்கும் சர்ப்ரைஸ் நடிகர் யார் தெரியுமா?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பிராஜெக்ட்- கே திரைப்படத்திற்கு கல்கி2898.ஏடி என பெயரிடப்பட்டுள்ளது.  நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் தெலுங்கு சினிமாவை திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதுகளை அள்ளிய…

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பிராஜெக்ட்- கே திரைப்படத்திற்கு கல்கி2898.ஏடி என பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் தெலுங்கு சினிமாவை திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதுகளை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும்  படம் பிராஜெக்ட்- கே.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் உண்மையான தலைப்பு குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே மிகுதியாக இருந்தது.

இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும், அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ நாகருக்கு சென்றுள்ளனர். பெரிய பொருட்செலவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ப்ராஜெக்ட் கே என்றால் என்ன..? (What is Project K) என்ற தலைப்பில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் அரங்கேறின. ப்ராஜெக்ட் கே படக்குழு, இதற்காக காமிக் புத்தகம், டீ சர்டுகள் போன்ற பல பொருட்களை படத்தின் பெயருடன் உருவாக்கியது. இதையடுத்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஷாக்கிங் சர்ப்ரைஸாக சார்பட்ட பரம்பரை படத்துக்கு பிறகு நடிகர் பசுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த ஃபர்ஸ்ட் க்ளிம்ஸில் இடம்பெற்றுள்ளார். விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக சொல்லப்படும் கல்கி அவதாரத்தையே நடிகர் பிரபாஸ் தற்போது எடுத்துள்ளார். ஏற்கனவே ப்ராஜெக்ட் கே டைட்டிலுக்கான அர்த்தமாக கல்கி இருக்கும் என யூகிக்கப்பட்டது  போல அதே டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.