பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 23 நாள் உண்டியல் காணிக்கையாக 2 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
ரொக்கமாக 2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. தங்கம் 1025 கிராமும், வெள்ளி 13,573கிராமும், வெளிநாட்டு கரன்சி 878 நோட்டுகளும் கிடைத்துள்ளது. இது 23 நாட்களில் கிடைத்த காணிக்கை ஆகும். தங்க வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.







