ஓடிடியில் வெளியானது #Vimal -ன் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’!

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவான ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. இந்த திரைப்படத்தில் விமலுடன் கருணாஸ்,…

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவான ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. இந்த திரைப்படத்தில் விமலுடன் கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த திரைப்படத்தில் ரகுநந்தன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh

அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்னையை மையமாக வைத்து இந்த திரைப்படம் இயக்கப்பட்டிருந்தது. பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபரவென்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்ததால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.இந்த திரைப்படம் கடந்த ஆக. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.