மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
மதுரை அரசு மருத்துவனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, மாடித்தோட்ட வளாகம் மற்றும் முதுகுத் தண்டுவட காய படுக்கை புண் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் பழுதடைந்துள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும்,
விரைவில் அந்த பணிகள் தொடங்கும் என கூறினார். மேலும், மதுரை மாவட்டத்தில் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரை மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் எனக்கூறினார்.








