தேர்தல் வழக்கு: உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். அவரை அமைச்சராக்க வேண்டும்…

உதயநிதி வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். அவரை அமைச்சராக்க வேண்டும் என அமைச்சர்களும், திமுகவின் முன்னணி நிர்வாகிகளும் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி பிரேமலதா என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தவிட்டார்.

இதேபோல தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தாக்கல் செய்த தேர்தல் வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணையின்போது உதயநிதி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதி, வாதங்களை தொடங்காவிட்டால் மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினார். வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.