வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வைகை அணையின் பூர்வீக பாசனப்…

வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வைகை அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான 1, 2, 3 ஆகிய மூன்று பாசன பகுதிகளுக்காக வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ந்தேதி வரை 3 கட்டமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

வைகை அணையில் இருந்து ஏற்கனவே வினாடிக்கு 769 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 2,769 கன அடி நீர் வைகை ஆற்றில் வெளியேறி வருவதால், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப் பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.13 அடியாகவும், நீர் இருப்பு 5,860 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,191 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,769 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 8.20 மணி முதல் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.