விமானத்தின் கீழ் திடீரென புகுந்த கார்!-டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் நேற்று காலை பீகார் மாநிலம், பாட்னாவுக்கு செல்ல இண்டிகோ விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது அங்கு கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கார் ஒன்று வேகமாக வந்தது.…

டெல்லி விமான நிலையத்தில் நேற்று காலை பீகார் மாநிலம், பாட்னாவுக்கு செல்ல இண்டிகோ விமானம் தயார் நிலையில் இருந்தது.

அப்போது அங்கு கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கார் ஒன்று வேகமாக வந்தது. விமானத்தின் நோஸ் வீல் என்றழைக்கப்படும் முன்பகுதியில் கார் புகுந்தது.

அதிருஷ்டவசமாக அந்தக் கார் விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் மோதவில்லை. ஒருவேளை விமான சக்கரங்களில் அந்தக் கார் மோதியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.

இந்தச் சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இந்தச் சம்பவத்தால் அந்த விமானத்தின் சேவை பாதிக்கப்படவில்லை. அது உரிய நேரத்தில் பாட்னா சென்றடைந்தது. இதுதொடர்பாக விமான போக்குவரத்துத் தலைமை இயக்குரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.

“வாகன ஓட்டுநர் மது அருந்தவில்லை. அவர் உடல் சோர்வு காரணமாக தெரியாமல் விமானத்தின் கீழ் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமானத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.