உழக்குடி பகுதியில் அகழ்வாராய்ச்சி-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழ்வாராய்ச்சி நடத்தி உழக்குடி பகுதியைபாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உழக்குடி பகுதியில் ஏற்கனவே…

தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழ்வாராய்ச்சி நடத்தி உழக்குடி பகுதியைபாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உழக்குடி பகுதியில் ஏற்கனவே அகழ்வாராய்ச்சி துறையினர் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இங்கு பாதுகாக்கப்படும் அளவிற்கு எந்த விதமான பொருளும் இல்லை இந்தப் பகுதி ஏற்கனவே சேதம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்தது.

தூத்துக்குடி உள்பட பல மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உழக்குடி பகுதியும் இடம்பெற்றுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உழக்குடி பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தி அதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பது குறித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் உள்ள பகுதியை சுற்றியுள்ள இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யவும், மேலும் அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, ஆனந்தி அமர்வில் விசாரனைக்கு வந்தது.  அதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.