பாதுகாவலர்கள் பணிக்கு ஆட்தேர்வு-மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்புப் பணிக்காக அவுட்சோர்ஸ் முறையில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்புப் பணிக்காக அவுட்சோர்ஸ் முறையில்
முன்னாள் ராணுவ வீரர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு
மாநிலங்கள், நாடுகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
மற்றும் சுற்றுலா பயணிகள் வருகைத்தருகிறார்கள்.

கோயில் பாதுகாப்பிற்காக 100 காவலர்கள் நாள்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான உப கோயிலில் பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்ய கோயில் நிர்வாகம் ஒப்பந்த அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது.

ஒப்பந்த அறிவிப்பில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்ற 67 முன்னாள் ராணுவ வீரர்கள்
மற்றும் மின் உதவியாளர், ஓட்டுநர் பிளம்பர் என சுமார் 79 பணியிடங்களுக்கு
அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் தேர்வு செய்யவுள்ளதாகவும், இந்திய ராணுவத்தில்
சுபேதார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 30 முதல் 50 வயதுடைய முன்னாள் ராணுவ
வீரர்கள் தகுதி உடையவர் எனவும், 84 வகையான நிபந்தனைகளை விதித்து கோயில்
நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புப் பணியில் விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் வருகின்ற 14ஆம் தேதி வரை கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.