சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக தமிழ்…

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் சிறந்த வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆண்மையில், அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து ‘மிஸ் யூ’ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.