துல்கர் சல்மான் நடித்துள்ள ’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரூ 100 கோடி வசூலித்து மிரட்டியது. இதனை தொடர்ந்து துல்கர் சல்மான நடிப்பில் வெளியீட்டுக்கு தயராகியுள்ள படம் காந்தா.

இப்ப்டம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகை பாக்யஸ்ரீ போஸ் தமிழில் அறிமுகமாகிறார்.

செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் காந்தா திரைப்படம்  வருகிற நவ. 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.