தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி விவரங்கள் குறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த கடிதத்திற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பதில் அளித்துள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டில் 1,553 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2019-20ல் ரூ.385 கோடியாகவும், 2020-21ல் ரூ.541 கோடியாகவும், 2021-22ல் ரூ.379 கோடியாகவும் குறைக்கப்பட்டு வந்த நிதி, 2022-23ம் நிதியாண்டில் அது மேலும் குறைக்கப்பட்டு ரூ.159 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.








