ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்திய மொபைல் சந்தையில் சியோமி நிறுவனம் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும், அது தனது துணை நிறுவனங்கள் போக்கோ, ரெட்மி ஆகியவற்றில் இருந்து பட்ஜெட் விலையிலான மொபைல் போன்களை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுள்ளது. விரைவில் ரெட்மி நிறுவனம் ரெட்மி 10 என்ற மாடலில் தனது புதிய மொபைல் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான ரெட்மி 9 மொபைல்போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதில் பல மேம்பாட்டினை செய்து ரெட்மி 10 என அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அத்துடன் மொபைலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. இதுவரை சியோமி நிறுவனம் இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி இந்த மொபைல்போனானது கடல் நீலம், வெள்ளை மற்றும் அடர் சாம்பல் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் விலையானது 10,000க்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இணையத்தில் கசிந்த ரெட்மி 10 விவரங்கள்
ரெட்மி 10 மொபைலானது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் ஆகியவற்றுடன் வரும். இவை டெப்த் மற்றும் மேக்ரோ சென்சாராக இருக்கலாம். முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் இடப் பெற்றிருக்கும் என தெரிகிறது.
மொபைலானது 6.5 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உடன் வெளியாகும். இது 6GB RAM மற்றும் 128GB இண்டர்நெர் மெமரியை கொண்டிருக்கும் எனவும், 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபார்ஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என வெளியான தகவல்களில் தெரிகிறது.








