சென்னைக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது.

இந்தநிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மிக கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மெசேஜ் மூலம் TNSDMA எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.