கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி

கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும் என இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர், “இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட…

கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும் என இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர், “இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட உடன் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கேட்டோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தோம்.

இதனையடுத்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் உள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தால் மீனவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள் கைது விவகாரத்தில் நிச்சயம் ஒரு சுமூக தீர்வு காணப்படும். ஒன்றிய அரசின் மென்மையான போக்கினால் தான் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகம் தவிர பிற மாநில மீனவர்கள் கைது செய்யப்படும் போது ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் கைது செய்யும் போது எடுப்பதில்லை. ஒன்றிய அரசு மாற்றான் தாய் போக்குடன் நடக்காமல் தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒன்றிய அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும்.” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்,

“கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. இந்தியாவின் ஒரு நிலப்பரப்பை வேறு ஒரு நாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் எந்தவொரு சிறப்பு சட்டமும் இயற்றவில்லை.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை தவிர கச்சத்தீவு ஒப்பந்தத்தில் எதுமில்லை. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.