முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

கிளப் ஹவுசில் அதிகரிக்கும் ஆபாச chatகள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சாட், புகைப்படம், வீடியோக்களை பகிர்வதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அறிமுகமானது தான் club house எனும் சமூக வலைதள செயலி. இந்த செயலியில் நமது கருத்துகளை நமது குரலின் மூலம் உலகிற்கு தெரிவிக்க முடியும் என்பதால் பயனர்களிடையே இந்த செயலி நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த செயலி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மார்ச் 2020ம் ஆண்டு ஆப்பிள் மொபைல்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

அங்கு அந்த செயலியை பயன்படுத்தியவர்கள் கொடுத்த ரிவியூக்களை பார்த்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சமூக வலைதளவாசிகள் அச்செயலியில் அறிமுக நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்தநிலையில்தான் கடந்த மே 21ம் தேதி பீட்டா பதிப்பாக இச்செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பால் பல மில்லியன் டவுன்லோட்களை இந்த செயலி பெற்றது.

ஆரம்பித்த தொடக்கத்தில் பல விதமான டாப்பிக்குகளுடன் club house செயலி 24 மணி நேரமும் ஆரோக்கியமான உரையாடல்களுடன் பயனர்களுடன் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இதுபோன்ற மக்களுக்கு பயனுள்ள டாப்பிக்குள் பேசுவது குறைந்து 18+ குறித்த பேச்சுகள் அதிகரித்தது.

இதனால், பலரும் இந்த செயலியை உபயோகிப்பதை குறைத்துக்கொண்டனர். எதிர்பார்ப்புடன் வந்த செயலி தற்போது வந்த இடம் தெரியாமல் சென்று கொண்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன்  வகுப்புகள் நடைபெற்று வருவதால் பள்ளி சிறுவர்கள் தங்களது பொழுதுகளை மொபைல் போனிலேயே கழித்து வருகின்றனர். இதுபோன்றதொரு சமயத்தில் அதிகமாக செக்ஸ் அரட்டைகள்  நிகழ்ந்து வரும் இதுபோன்ற செயலிக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!

ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

Jayapriya

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை!

Halley karthi