5 மாநில தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி…

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி கடந்த 7ம் தேதி வரை நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரிய வரும். எந்தெந்த மாநிலத்தில் யார் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது மாலைக்குள் தெரிய வரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.