’அஞ்சான்’ படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான அஞ்சான் படத்தின் ரீரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் சமந்தா, வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனமானது, அஞ்சான் படத்தினை மறு எடிட் செய்து, மீண்டும் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தது. அதன் படி வரும் நவம்பர் 28 ஆம் தேதி மறு எடிட் செய்யப்பட்ட அஞ்சான் படம் திரையரங்குகளில்  வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார்11 ஆண்டுகள் கழித்து அஞ்சான் படம் ரீரிலீஸ் ஆகவிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.