11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணைத்தேர்வு நடைபெறவுள்ளதாக   அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி முதல்…

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணைத்தேர்வு நடைபெறவுள்ளதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் http://www.dge.tn.gov.in இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11ஆம் வகுப்பு துணைத் தேர்வை எழுத ஜூன் 29 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம். பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வை எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை சேவை மையங்கள் பற்றிய விவரங்களை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 2 முதல் 10ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற உள்ளது என்று  அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.