முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடப் போவதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நான் அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்டபோது, அமெரிக்காவைக் காப்பதற்கான போரில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : விஏஓ கொலை வழக்கு; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி ஆட்சியர் உறுதி 

அந்த போர் இன்னும் தணியவில்லை. இது நிம்மதியாக இருக்க வேண்டிய நேரம் அல்ல. அதனால் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நாம் இதை நிச்சயம் செய்து முடிப்போம். ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது. தங்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்காக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். இது தான் நமது கொள்கை என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோ பைடனும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சம்பவம் அமெரிக்க அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram