RCBvsDC | பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – குறைந்தபட்ச இலக்கை நிர்ணயித்த டெல்லி!

பெங்களூர் அணிக்கு எதிராக 163 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

2025 ஐபிஎல் தொடர் லீக் சுற்றில் இன்று(ஏப்.27), ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணி, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதி வருகிறது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ் ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் போரெல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் களம் கண்டனர். இதில் அபிஷேக் போரெல் 28 ரன்கள் அடித்து பி ஜோஷ் ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸ் 22 ரன்கள் அடித்து க்ருணால் பாண்ட்யாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த கருண் நாயர் வெறும் 4 ரன்களுடன் யாஷ் தயாளிடம் ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த கே.எல். ராகுல் பொறுப்புடன் நிதானமாக ஆடி 41 ரன்கள் சேர்த்து புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தற்போது பெங்களூர் அணி 163 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.