ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணியை விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டியது.
ஐ.பி.எல் போட்டியின் 39-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராத் கோலியும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.
படிக்கல் டக் அவுட் ஆக, அடுத்து வந்த பரத், விராத் கோலியுடன் இணைந்தார்.
சிறப்பாக ஆடிய விராத் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல், 56 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டு களும் ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட் மற்றும் மில்னே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக் 24 ரன்களில் வெளியேறி னார். இவரை அடுத்து வந்த வீரர்களில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இஷான் கிஷன் 9, சூர்யகுமார் 8, குருணால் பாண்ட்யா 5, பொல்லார்ட் 7, ஹர்திக் பாண்டியா 3, மில்னே 0, ராகுல் சாஹர் 0 என அடுத்தடுத்து வெளியேற, ரோகித் சர்மா மட்டும் தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்ஷல் பட்டேல் 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சாஹர் ஆகியோ ரை அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தி அசத்தினார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.








