முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்தது RCB : 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி   அபாரமாக  வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம்  ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார். இதனையடுத்து விராட் கோலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஃபாப் டு பிளெசிஸ் 44 பந்துகளில் 55 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.  இதன் பின்னர்  களமிறங்கிய  மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குவித்தது. இதன் மூலம்  ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆடம் சாம்பா, கேஎம் ஆசிஃப் ஆகியோர்  இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்ததாக 172ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலே அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்ததது. 2.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 11 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வியை தழுவியது.  ஆறுதலாக சிம்ரோன் ஹிட்மயர் 19 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்தார்.

இந்த நிலையில் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் சார்பில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வயனே பார்னெல் 3 விக்கெட்கள் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் கர்ன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேள்விக்குறியான மதுரை சித்திரை திருவிழா!

Niruban Chakkaaravarthi

10ம் வகுப்பு தேர்வு: மதுரை மத்திய சிறை கைதிகள் சாதனை

Web Editor

சென்னையில் இசை விருந்து படைக்கும் யுவன் : ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Dinesh A