CSK vs KKR : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.  இந்த டி20  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று  எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நிலையில்  7 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது

இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், லக்னோ அணி 13 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இது கடைசி போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.